Bigg Boss 6 வீட்டிற்குள் செல்லும் பிரபல நடிகையின் அண்ணன் : அட.. இவரு அந்த சீரியல் நடிகராச்சே..!

Author: Vignesh
30 September 2022, 5:30 pm

பிரபல கோலிவுட் நடிகையின் அண்ணன் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9ம் தேதி துவங்கவிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இருப்பினும் போட்டியாளர்கள் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

ராஜா ராணி 2 சீரியல் பிரபலம் வி.ஜே. அர்ச்சனா, மைனா நந்தினி, பாடகி ராஜலட்சுமி ஆகியோரும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்தாம்.

மேலும் பிரபல டான்ஸ் மாஸ்டரான ராபர்ட்டை பிக் பாஸ் 6 வீட்டில் பார்க்கலாமாம். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை மனதில் வைத்து தான் ராபர்ட் மாஸ்டரை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இது என்ன கூத்து என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே வனிதா விஜயகுமாரை கெஸ்ட்டாக அழைத்து வருமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரனின் பெயர் கூட அடிபட்டது. ஆனால் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு எல்லாம் செல்லவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu