பெண் குழந்தைகள் படம் ஆபாசமாக சித்தரிப்பு : போலீஸில் புகார் கொடுத்த பிரபல பாடகி..!

Author: Rajesh
28 April 2022, 11:34 am

பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி மீடு புகார் கொடுத்த தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள ஜானகி அவென்யூவில் வசிக்கிறார். இவரது கணவர் பெயர் ராகுல் ரவீந்திரன். இந்த நிலையில் தான் பாடகி சின்மயி, சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.

அதில் அவரது கணவர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் வகையில் ஒரு நபர் ஈடுபட்டு வருவதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த மனுவில் அவர் கூறியதாவது, நானும் எனது கணவரும் போட்டோ ஷூட் கம்பெனி நடத்தி வருகிறோம். எங்களது கம்பெனி பெயரை பயன்படுத்தி, குறிப்பிட்ட செல்போன் நம்பரில் இருந்து, பெண் குழந்தைகளின் படத்தை தவறாக சித்தரித்து ஒருவர் வெளியிட்டு வருகிறார். இது எங்கள் கம்பெனியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?