பாஜகவில் இருந்து விலகல்.. உடனே வேறு கட்சியில் இணைந்த சினிமா பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 December 2024, 12:48 pm

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து பல வெற்றிபடங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ். இவர் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் வில்லனாக நடித்த தாரை தப்பட்டடை திரைப்படம் பெரும் புகழை சேர்த்தது. இவர் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

பாஜகவில் இருந்து விலகி ஐஜேகேவில் இணைந்த ஆர்கே சுரேஷ்

திடீரென பாஜகவில் இருந்து விலகிய அவர் இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். ஐஜேகே கட்சியில் இணைந்த ஆர்கே சுரேஷ்க்கு உடனே பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

RK Suresh Quits BJP

பாஜகவில் இருந்த போது ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக ஆர்கே சுரேஷ் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொட்பாக அவர் தலைமறைவாக இருந்து பின்னர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

பாஜகவில் முக்கியத்துவம் அளிக்காததால் அவர் கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்திருந்ததாகவும், அதன்படியே தற்போது ஐஜேகே கட்சியில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது

இதையும் படியுங்க: ‘கூலி’ படத்தில் ரஜினிக்கு மகனாகும் பிரபல நடிகர்.. கசிந்தது புகைப்படம்!

இதனிடையே இது தொடர்பாக ஆர். கே.சுரேஷ்க்கு பொறுப்பு வழங்கி அக்கட்சி தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் ஆணைக்கிணங்கவும் பரிந்துரையின் பேரிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் (National Organizing Secretary) பொறுப்பிற்கு R.K. சுரேஷ் நியமிக்கப்படுகிறீர்கள்.

இப்பொறுப்பை ஏற்கும் நீங்கள். பாரிவேந்தர் வழிகாட்டுதலுக்கு இணங்க, நமது கட்சியின் கொள்கைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டுமென தெரிவித்துக்கொண்டு, தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.

IJK Parivendhar Give New Post to RK Suresh

மேலும், இப்பொறுப்பினை ஏற்கவுள்ள தாங்கள், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு, அதிகளவில் உறுப்பினர்களையும் சேர்க்கவேண்டும். இச்செயல்பாட்டினை அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்குள் நீங்கள் நிறைவேற்றினால், உங்கள் பதவி நிரந்தரமாகும் என்பதோடு, மூன்று வருடங்களுக்கு உங்கள் பதவி நீட்டிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!