பீஸ்ட் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் ரெஸ்பான்ஸ்.. திரையரங்கு நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு..?
Author: Rajesh13 April 2022, 4:05 pm
நடிகர் விஜய்யின் 65-வது படமான ‘பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை முதலே திரைப்படத்தினை காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள்.
திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும், படத்தை பற்றி நெகட்டிவாக மட்டுமே கூறி வருகிறார்கள். இந்நிலையில், படத்திற்கு கிடைத்துள்ள இந்த நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் காரணமாக மதுரையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் டிக்கெட் விலையை குறைத்துள்ளார்களாம். முதலில் ரூ. 500-ஐ தாண்டிய பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலை, தற்போது ரூ. 190 வரை வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.