“நோட்டா கிட்ட வச்சுக்கோ…. எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்”… கோவையில் பாஜகவுக்கு பதிலடி கொடுத்த திமுக..!!

Author: Babu Lakshmanan
14 September 2022, 10:13 am

கோவை : கரூரில் மின்சாரத்துறை அமைச்சரை கேலி செய்து போஸ்டர் ஒட்டிய பாஜகவினருக்கு, கோவையில் பதிலுக்கு போஸ்டர் ஒட்டி திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அதில் “திருடர் குல திலகமே ஊழலின் மறு உருவமே அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட் 5,000 கோடிக்கு அதிபதியாக்கிய BGR ஊழல்” என்ற வாசகத்தை எழுதி, தராசு தட்டில் ஒரு பக்கம் பணக்கட்டுகளும், மறுபக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்திருப்பது போலும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

அதிலும், அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை விட பலமானவர் என்பதை போல் தராசு தட்டு அமைச்சர் இருக்கும் பக்கத்தில் சாய்ந்திருப்பது போன்று சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.

இந்நிலையில் கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பாஜகவை மறைமுகமாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில், “நோட்டா கிட்ட வச்சுக்கோ…. எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்…” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

  • வெட்கமே இல்ல? புது மருமகளை சக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நாகார்ஜூனா!
  • Views: - 412

    0

    0