மாறி மாறி போஸ்டரில் அரசியல் செய்யும் தமிழக எதிர்கட்சிகள்.. திணறும் திமுக!

Author: Hariharasudhan
2 January 2025, 11:35 am

தமிழகத்தின் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள், அண்ணா பல்கலை விவகாரத்தில் போஸ்டர் அரசியலை கையிலெடுத்து கவனம் பெற்றுள்ளது.

சென்னை: யார் அந்த SIR?, பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி, அடுத்தது நானா ஆகிய கேள்விகள் மற்றும் கருத்துகள் உடன் போஸ்டர் அரசியலை தமிழகத்தின் ஆளும் அரசுக்கு எதிராக உள்ள கட்சிகள் முன்னெடுத்துள்ளன. முக்கியமாக, பிரதான எதி்ர்கட்சியான அதிமுக, யார் அந்த சார் என்ற கேள்வியுடன் முதலில் போஸ்டர் ஒட்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசைக் கண்டித்து தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இதனையடுத்து, ‘ பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி – பொண்ணுங்க படிப்பு நிறுத்தப் பார்க்குது ‘ என தமிழ்நாடு மாணவர் மன்றம், மாணவியர் பிரிவு போஸ்டர் ஒட்டியது.

Poster politics in Tamilnadu

இதனையடுத்து இன்று, பாமக சார்பில் ‘ அடுத்தது நானா? Am I Next? ‘ என்ற கேள்வியுடன் சென்னை முழுக்க போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. எனவே, போஸ்டர் அரசியல் மீண்டும் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. ஆனால், இவை அனைத்தும் ஒற்றைப் புள்ளியில் வந்து நிற்கின்றன. அதாவது, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்லூரி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.. மாணவர்கள் போராட்டம்!

இதற்கு, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை, பெண்களுக்கான பாதுகாப்பு ஆகியவை மிகுந்த ஆபத்தில் உள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டினர். குறிப்பாக, அதிமுக பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை காலணி அணிய மாட்டேன் என அண்ணாமலை அறிவித்தார்.

இதனிடையே, திமுக இதனை அரசியல் கருத்துகளையும் தெரிவித்து வருகிறது. மேலும், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரித்து வருகிறது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 87

    0

    0

    Leave a Reply