திமுக – பாஜக இடையே போஸ்டர் யுத்தம்… சுதந்திர தின போஸ்டரை ஒட்ட சென்ற பாஜகவினருக்கு திமுக எதிர்ப்பு : ஆட்சியர் மீது வழக்கு தொடர முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 2:24 pm

மாவட்ட ஆட்சித் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என கோவை மாவட்ட பாஜக தலைவர் எச்சரித்துள்ளார்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டிய பொழுது 10 நாட்களுக்குள் கோவை மாநகரில் உள்ள அனைத்து போஸ்டர்களும் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால், திமுகவினர் மட்டும் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வந்ததாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தோம் எனவும் கூறினார். மேலும் உயர் நீதிமன்ற ஆணையை கொண்டு கோவிலை மட்டும் இடிக்கக்கூடிய இந்த அரசு ஏன் இந்த போஸ்டர் விவகாரத்தில் அதனை பின்பற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.

நேற்று பாஜக சார்பில் சுதந்திர தின விழா குறித்து போஸ்டர் ஒட்டச் சென்றபோது திமுகவினர் அராஜகமாக நடந்து கொண்டதாகவும் அவர்கள் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என பீளமேடு காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

இன்று இரவிற்குள் மாவட்ட நிர்வாகம் அனைத்து போஸ்டர்களையும் அகற்றவில்லை என்றால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து போஸ்டர்களையும் இன்று இரவு அகற்றுவோம் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?