EPSனா Evergreen Powerfull Star… கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா : கோவை நகர் முழுவதும் எடப்பாடியாருக்கு ஆதரவாக போஸ்டர்!!
Author: Udayachandran RadhaKrishnan29 June 2022, 10:34 am
கோவை மாநகர பகுதிகளில் கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா என அதிமுக எம்எல்எ அம்மன் அர்ஜூனன் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் கூறிவந்த நிலையில் தற்போது ஒற்றை தலைமை என பதவி பூதாகரமாகி வருகிறது.
இதையடுத்து கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பொதுக்குழுவில் பங்கேற்ற ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதியில் இருந்தே வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வரும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்றும், அதில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் அடித்து வருகின்றனர். அதேபோல ஓபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் தேனி பெரியகுளம் பகுதியில் போஸ்டர் அடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், எவர்கிரீன் பவர்ஃபுல் ஸ்டார் எனவும் கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் அடித்து கோவையில் ரயில் நிலையம் உக்கடம் டவுன் ஹால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர். அதிமுகவில் இரண்டு கட்சியினரும் மாறி மாறி போஸ்டர் ஒட்டுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.