நெருப்புடா.. முடிஞ்சா தமிழகத்தை நெருங்குடா : முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2022, 4:44 pm

கோவை : உக்கடம் பகுதியில் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு “நெருப்புடா! இனி தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்!” என்ற வசனங்களுடன் ஒட்டப்பட்டுள்ள திமுக போஸ்டர்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக கோவை ரயில் நிலையம் பகுதிகளில் “தலைவர் 69” “நெருப்புடா! இனி தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்!” என்ற வசனங்களுடன் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன.

இதில் மு.க.ஸ்டாலின் குழந்தை பருவம் முதல் தற்போது முதல்வர் பதவி வரையிலான அவரது தனிபுகைபடங்கள், குடும்ப புகைப்படங்கள், அரசியல் வாழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!