தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது… புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

Author: Vignesh
31 May 2024, 4:11 pm

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொளுத்தும் கோடை வெயிலின் காரணமாக தற்போது, பள்ளிகள் பத்தாம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோடை விடுமுறை ஒரு வழியாக முடிவடைய போகிறது. கடும் வெயில், மழை வெப்ப அலைகள் என மாறுபட்ட வானிலை தமிழக மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, திரும்பும் பக்கமெல்லாம் அனல் காற்று தான் வீசுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

school

மேலும் படிக்க: என்னடா சொல்றீங்க.. 200 மி.லி தாய்ப்பால் 700 ரூபாய்.. மெடிக்கல் ஷாப்பிற்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்..!

இதையொட்டி, அவர்களுக்கு தேவையான புத்தக பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்பட பள்ளிக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் பெற்றோர், மாணவ-மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசு பள்ளிகளில் முதல் நாளில் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  • வெட்கமே இல்ல? புது மருமகளை சக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நாகார்ஜூனா!
  • Views: - 285

    0

    0