கள்ளக்காதலி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைப்பு : தன் மீதும் தீ பரவியதால் அலறிய கூலித்தொழிலாளி.. வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2022, 7:37 pm

வேலூர் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.

இன்று காலை 9.30 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதைப்பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் தீயில் எரிந்தபடி வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து மெயின் ரோட்டினை நோக்கி ரமேஷ் ஓடினார். இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண் உயிருக்கு போராடி உள்ளார். அவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில், ரமேஷின் வீட்டில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த திலகவதி (வயது 38) என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- குடியாத்தத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு அதேபகுதியை சேர்ந்த கோபி என்பவரது மனைவி திலகவதிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

திலகவதி அடிக்கடி ரமேஷ் வீட்டுக்கு வந்து சென்று வந்துள்ளார். இந்தநிலையில் இன்று காலை திலகவதி, ரமேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அப்போது ரமேஷ் மீதும் தீ பற்றிக்கொண்டது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதற்காக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 752

    0

    0