மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வருகை தந்துள்ளார். மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.
அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நிறைவுப்பெற்றது.
கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை சார்ந்த 25 முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில், சென்னை, கிண்டியில் அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மின் நிறுத்தம் தொடர்பாக அரசியல் செய்ய விரும்பவில்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது. அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை.
மேலும், பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இன்றைய பொதுகூட்டத்தில் பதில் தெரிவிக்கப்படும் அதேப்போல், நாங்கள் கேட்கும் கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் ” என்று அவர் கூறினார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.