திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை,ரெங்கை சேர்வைக்காரன்பட்டியில்,பெரியூர்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.39 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான கட்டிடங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு திறந்து வைப்பதற்காக வந்தார்.
இந்த நிலையில் முதலாவதாக செந்துறை பகுதியில் அமைந்து உள்ள ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்து மைக்கில் மைக்கில் பேச தொடங்கிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பொதுமக்களிடம் மைக் இல்லாமல் பேசிவிட்டு அடுத்த கிராமத்திற்கு காரில் சென்றார். அதைத்தொடர்ந்து பெரியூர் பட்டியில் உள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான நாடக மேடையை திறப்பதற்காக வந்தபோது ஸ்பீக்கரில் அதிமுக கட்சி பாடல் பாடிக் கொண்டிருந்தது.
அதைத்தொடர்ந்து ரிப்பன் வெட்டி நாடகமேடு திறந்து வைத்து மேடையில் வைக்க பிடித்து பேச முன் வரும்போது மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்பொழுதும் பொது மக்களிடையே மைக் இல்லாமல் பேசிவிட்டு அடுத்த ரெங்கசேர்வைக்காரன்பட்டிக்கு நியாய விலை கடை திறப்பதற்காக சென்றார். அங்கும் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் கடுப்பான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விசுவநாதன் பொதுமக்களிடையே திமுகவினர் வேண்டுமென்றே செய்கிறார்கள் இதுதான் திமுக ஆட்சி என்றாலே மின்தடை என்பது பழக்கமாகிவிட்டது என்று மைக் இல்லாமல் பொதுமக்களிடம் பேசினார்.
மூன்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பினார். அதைத் தொடர்ந்து அங்குள்ள கட்சியை சேர்ந்தவர்கள் மின்தடை அறிவிப்பு இல்லாமல் மைக்கை தொட்டவுடன் மின்சாரத்தை துண்டிக்கிறார்கள் என புலம்பிக் கொண்டே சென்றனர். முன்னாள் மின்துறை அமைச்சருக்கு சோதனையா? என்ன பொதுமக்கள் பேசினர்.
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
This website uses cookies.