மின் கட்டண உயர்வால் வாழ்க்கையே போச்சு : விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்.. வேறு தொழிலுக்கு மாறும் சூழல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2022, 12:53 pm

திருப்பூர்: மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாதா விசைத்தறிக்கு 30 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களால் இந்த கட்டண உயர்வை எந்த வகையிலும் செலுத்த இயலாது என்பதால் தொழிலை விடுத்து வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதாகவும். தமிழக அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர், சாமளாபுரம் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறியை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 1 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும். நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 423

    0

    0