பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்… அவர் திரும்பி வருவார் : பிறந்தநாள் விழாவில் பகீர் கிளப்பிய வைகோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2023, 1:21 pm

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்… அவர் திரும்பி வருவார் : பிறந்தநாள் விழாவில் பகீர் கிளப்பிய வைகோ!!

சென்னை எக்மோரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இலங்கையில் இலங்கை தமிழர்கள் சுதந்திரத்திற்காக போராடிய எல்டிடிஇ இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 69 ஆம் பிறந்தநாள் முன்னிட்டு மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நம்புகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு, இலங்கை தமிழர்களுக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் இன்னும் என்னத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

பழ நெடுமாறன் ஆகியோர் விடுதலை புலிகளுடன் பழகாலமாக இருந்தவர்கள் அவர்கள் பொய் சொல்ல வேண்டும் என அவசியமும் கிடையாது.

பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் உள்ளோம், அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே எங்களது கருத்து என குறிப்பிட்டார்

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ