தவெக வாக்கு வாங்கி இவ்வளவா? பிகே கணக்கு பலிக்குமா? விஜயின் வியூகம் என்ன?

Author: Hariharasudhan
11 February 2025, 6:57 pm

விஜயின் தவெகவுக்கு 15 – 20 சதவீத வாக்குகள் தமிழகத்தில் உள்ள பிரசாந்த் கிஷோர் விஜயிடம் அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாட்டில் தற்போது 15 முதல் 20 சதவீத வாக்குகள் இருப்பதாகவும், இந்த வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டியது என்னென்ன என்பது குறித்தும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விஜயிடம் அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இந்த அறிக்கையை அவர், தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்திடம் சமர்பித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, தவெக தலைவர் விஜய் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இடையே நேற்று (பிப்.10) சுமார் மூன்று மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது.

இதன் அடிப்படையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சிறப்பு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரசாந்த் கிஷோர், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டார்.

TVK Vote bank in TN

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 28 அணிகளின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

இதையும் படிங்க: மதப்பூசலை உருவாக்க நினைக்கிறதா திமுக? சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்!

இதன்படி, தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி, ஊடகப் பிரிவு, பிரசாரம் மற்றும் பேச்சாளர் அணி, உறுப்பினர் சேர்க்கை, காலநிலை ஆராய்ச்சி மற்றும் சூழலியல், வரலாற்றுத் தரவு ஆராய்ச்சி மற்றும் உண்மைச் சரிபார்ப்பு, மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள்,

இளைஞர், மாணவர், மகளிர், இளம்பெண்கள், சிறார்கள், வணிகர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், தொழிலாளர், தொழில் முனைவோர், வெளிநாடு வாழ் இந்தியர், மருத்துவர்கள், விவசாயிகள், கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியm, அனைத்திந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் உள்பட 28 அணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E

    Leave a Reply