இறப்பதற்கு முன்பே மரணம் குறித்த பதிவு.. முகநூலில் பிரதாப் போத்தன் போட்ட பதிவு வைரல்.!

Author: Rajesh
15 July 2022, 2:38 pm

10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவரும், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான பிரதாப் போத்தன், இன்று காலை 8 மணி அளவில் உயிரிழந்தார். 69 வயதாகும் இவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக வசித்து வந்த நிலையில், காலை வெகு நேரமாகியும் இவர் எழ தாமதமானதால் இவருடைய சமையல்காரர் காபி போட்டு இவரது அறைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது பிரதாப் போத்தன் சுயநினைவின்றி மெத்தையில் படித்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தட்டி எழுப்பியும், முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தும் எழாததால், உடனடியாக இது குறித்து பிரதாப் போத்தனின்கார் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, பிரதாப் போத்தனை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் இவரை சோதனை செய்து விட்டு, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் பிரதாப் போத்தன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இவரது உடல் அஞ்சலிக்காக இன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் வேலங்காடு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதே போல் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இவர் கடைசியாக போட்ட முகநூல் பதிவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், வருங்கால சங்கதியினர் குறித்தும் சிரித்து கொண்டே அழும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில்… பெருக்கல் என்பது ஒரு விளையாட்டு, ஒவ்வொரு தலைமுறையும் ஒரே மாதிரியாக தான் விளையாடி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். அதே போல் ஞாயிற்று கிழமை அன்று மரணம் குறித்து இவர் போட்டுள்ள பதிவு ஒன்றும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 655

    0

    0