பொறந்தது இரண்டுமே பெண் குழந்தைகள்.. மீண்டும் கர்ப்பம்.. காட்டிய ஸ்கேன் : அதிரடி காட்டிய ஆட்சியர்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2024, 3:25 pm

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா பாப்பாரப்பட்டி அருகே கிட்டனஅள்ளியில் கர்ப்பிணி வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட ஆட்சியர் சாந்திக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் இன்று இரவு சுமார் 10-மணிக்கு, இணைஇயக்குநர் டாக்டர்.சாந்தி, தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவிணர் கிட்டன அள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்க்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள்,சிறிது நேரம் காத்திருந்து திடிரென வீட்டிற்க்கு உள்ளே சென்று பார்த்த போது கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள பெண் குழந்தையை கரு கலைப்பு செய்வதற்காக கர்ப்பிணியின் பிறப்புறுப்பில் கருக்கலைப்பு மாத்திரை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக மாத்திரையை அப்புறப்படுத்தி விசாரித்தில் கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர் திருமனமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதும்,தற்போது வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என தெரிந்ததால் கருகலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை அடுத்த குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த சித்ராதேவி (42) என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.சித்ராதேவியை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்த 3 பேர் மீது இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில் கருக்கலைப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!