கருவுற்ற பெண் யானை… நடுக்காட்டில் இருந்து வந்த துர்நாற்றம் : கோவையில் மீண்டும் சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2023, 9:39 am
கருவுற்ற பெண் யானை… நடுக்காட்டில் இருந்து வந்த துர்நாற்றம் : கோவையில் மீண்டும் சோகம்!!
கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச் சரகம், நரசிபுரம் பிரிவு, கழுதை ரோடு சராக பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு இருந்த போது கிணத்துக்குளி ஓடை தடுப்பணைக்குள் பெண் யானை ஒன்று இறந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் கோவை வனக் கோட்டம் உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார், போளுவாம்பட்டி வனச் சராக அலுவலர் சுசீந்திரநாத் மற்றும் வனப் பணியாளர்கள், “CWCT” தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கோவை வன மண்டலம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் சுகுமார், நரசிபுரம் உதவி கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் இறந்த பெண் யானையின் மீது உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவர் இறந்த பெண் யானையின் வயது 22 முதல் 25 இருக்கலாம் எனவும் மேற்படி யானை இறந்து 2 நாட்கள் இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தார்.
இறப்பிற்கான காரணம் யானையின் கர்ப்பப்பையில் 20 முதல் 22 மாதமுடைய ஆண் சிசு இருந்தது. யானையின் சினைப்பை கால பிரச்சினை காரணமாக பெண் யானை இறந்து இருக்கலாம் என மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்து உள்ளனர்.