திருச்சி அருகே அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்க்காக சென்ற கர்ப்பிணியும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவர் டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சூரியகாந்தி (38) இவர்களுக்கு ராகுல் (15) மற்றும் சாதனா (9) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் 3வது முறையாக கர்ப்பமடைந்த சூரியகாந்தி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ள நிலையில், 3வது குழந்தை 10 மாதம் நிறைவடைந்தும் பிரசவ வலி வரவில்லை.
எனவே, கடந்த 20ந் தேதி சூரியகாந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்த போது, ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சூரியகாந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் அதிகமான ரத்தப்போக்கு இருந்துள்ளது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று சூரியகாந்தியின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய போது, அதிக மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் சொந்த ஊரான சுணைப்புக நல்லூருக்கு வந்தது. கிராம மக்கள், உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மேலும் சூரியகாந்தியின் மகள் துக்கத்தை தாங்க முடியாமல், ‘அம்மா என்னை விட்டுட்டு போயிட்டியே’ என கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்குச் சென்ற தாயும் பெற்றெடுத்த சேயும் சுடலமாக வீடு திரும்பினர்.
பிரசவத்தில் தாயும் சேயும் சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.