லாரி மோதி கர்ப்பிணி பெண் பலி… கால்களை இழந்த கணவர் : நேரில் சென்று ஆறுதல் கூறிய திமுக எம்எல்ஏ!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2023, 8:27 pm

திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன கர்ப்பிணி பெண் ஐஸ்வர்யா அவரது கணவர் அஜித் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மீஞ்சூர் அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கடந்த 8ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது கணவர் அஜித் இரண்டு கால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடம் இருந்து முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் நிதியை நிவாரணமாக பெற்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஐஸ்வர்யாவின் தந்தை ராஜபாபு மற்றும் லஷ்மி ஆகியோரிடம் வழங்கினார். இதில் கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்..

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!