திண்டுக்கல் ; பழனியில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருடைய மனைவி பெனாசீர் சித்திகா (24). திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று இரவு திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
இது குறித்து தற்கொலை செய்து கொண்ட பெனாசீர் சித்திக்காவின் தாயார் அரக்காஸ் அம்மாள் கூறியபோது :- எனது மகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை எனது மகளை சந்தித்தபோது மூன்று மாதம் கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், சாகுல் அமீது அடிக்கடி பணம் கேட்டு மாமனார், மாமியார் தொந்தரவு செய்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தோம். மாமனாருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டால் தனது மகளை கால்களை அழுத்தி விடச்சொல்லி டார்ச்சர் செய்ததாக அடிக்கடி என் மகள் கூறிவந்தார். இந்நிலையில் மருமகனின் உறவினரான பரிதா என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சில விஷயங்கள் பேசுவதாக கூறி சாகுல் அமீதை தனியாக அழைத்து சென்று பேசுவதும், இதனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு கூறிக்கொண்டே வந்தார்.
இந்நிலையில் எனது மகள் நேற்று இரவு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள். என் மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. மாமனார், மாமியார், மருமகன் மூன்று பேரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்.என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழனியில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
தமன்னாவின் ஜிம் வீடியோ வைரல் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.'கேடி' படத்தில் வில்லியாக அறிமுகமாகி…
This website uses cookies.