தூத்துக்குடியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… கடவுள் போல வந்த திருநங்கைகள்.. லோடு ஆட்டோவில் சுகப்பிரசவம்!!
தூத்துக்குடியில் பெய்த மழை காரணமாக மாநகர பகுதிகள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதுமாக தண்ணீரி மூழ்கி உள்ளதால் அங்கு வரக்கூடிய நோயாளிகள் பெரும் அவதியடைந்து உள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியவோ அல்லது உள்ளையோ செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு ரப்பர் படகுகள் மூலம் நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து உள்ளேயும் வெளியேயும் அழைத்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளகாடு பகுதியை சார்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மனைவி கற்பகவள்ளி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதனால் நேற்று மாலை அவருக்கு திடிரென பிரசவ வழி எடுத்து வழியால் துடித்தார். இதனை கண்ட அங்கிருந்த திருநங்கைகள் சிலர் உடனடியாக கற்பகவல்லியை ஒரு குட்டி யானை வாகனத்தில் அழைத்துகொண்டு வேகமாக ஊருக்குள் தேங்கி உள்ள மழை நீரை கடந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அங்கு மழை நீர் குளம்போல் தேங்கி இருந்ததை கண்டு உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர் அப்போது கற்பகவள்ளி-க்கு வலி அதிகமாக எடுத்து குட்டியானை வாகத்தில் வைத்தே குழந்தை பிறந்தது.
உடனடியாக மருத்துவமனை உள்ளே இருந்து வந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் குட்டியானை-யில் பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் இருந்த கர்பகவள்ளியை மீட்டு ரப்பர் படகு மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் அனுப்பி வைத்தனர்.
இக்கட்டான சூழ்நிலையில் தாய் சேய் உயிரை காப்பாற்றிய திருநங்கைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.