சொக்கத்தங்கத்துக்கு கிடைத்த பேரன்புமிக்க மனைவி…. கேலி , கிண்டல், வெற்றி, தோல்வி – இறுதி வரை துணைநின்ற பிரேமலதா!

மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார். திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.

மேலும் சினிமாவை கனவாக கொண்டு வளர்ந்த திறமையான இளம் தலைமுறையினர் பலரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமை விஜயகாந்தையே சேரும். திரைப்பட கல்லூரி பட்டதாரிகளை இயக்குனராக அறிமுகப்படுத்தி உதவி செய்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான். மேலும் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும் அத்தனை பேரின் பசியை போக்கியவர் விஜயகாந்த். வயிறார சாப்பாடு போட்டு அதில் சந்தோஷப்படக்கூடய ஒரே நல்ல மனிதர் அவர். மேலும் விஜயகாந்தின் படப்பிடிப்புகளில் மட்டும் தான் அசைய உணவுகள் அதிகம் இருக்கும் ஊர்வன , பறப்பன நடப்பன என அனைத்தும் இருக்கும்.

விஜயகாந்த் ராவுத்தர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். அங்கிருந்து தான் சாப்பாடு வரும். விஜயகாந்த் ஷூட்டிங்கிற்கு போனால் வயிறு நிறைஞ்சிடும்பா என சொன்ன நடிகர்கள் பலர் உள்ளனர். அவர் போட்ட சோறு தான் இன்றைக்கும் அவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. எம்ஜியாருக்கும் விஜயகாந்திற்கும் நல்ல நட்பு இருந்தது. மற்ற நடிகர்களின் டீ, காபி கொடுத்தே படம் எடுப்பார்கள். ஆனால், விஜயகாந்த் ஷூட்டிங்கில் ஹார்லிக்ஸ், பூஸ்ட், சூப், அசைவம் , சைவம் என குறையாமல் சாப்பாடு போட்டுக்கொண்டே இருப்பார்கள். அவ்வளவு நல்ல மனம் கொண்ட மனிதர் விஜய்காந்த்த் உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார்.

நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது. இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை அறிவித்து அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து விஜகாந்த்தின் உடலுக்கு திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மனைவி பிரேமலதா விஜயகாந்த் மரணம் தாங்க முடியாமல் அவரது உடலின் அருகிலே நின்று கதறி அழுதுக்கொண்டிருக்கிறார். கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என சொல்லப்படுவதற்கு விஜயகாந்த் – பிரேமலதா திருமணம் சான்று.

ஆம், விஜயகாந்த் மிகப்பெரிய ஹீரோ, அரசியல்வாதி என்பதையெல்லாம் தான் அவர் ஒரு சிறந்த கணவராக இருந்துள்ளார். விஜயகாந்தின் தீவிர ரசிகையான பிரேமலதா உலகத்தின் மொத்த பாசத்தையும் அவர் மீது வைத்து கடைசி வரை குறையாத அன்புடன் காதலித்தார். விஜயகாந்தின் திரைப்பட வெற்றிகள் , அரசியல் தோல்விகள் , மேடைப்பேச்சு கிண்டல்கள், கேலி , கடைசி காலம் என அனைத்திலும் அவர் கூடவே துணை நின்ற அன்பான மனைவி பிரேமலதா. விஜயகாந்த், பெயர் , புகழ் , பணம் சம்பாதித்தது போல ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே அமையும் அன்பான மனைவி பிரேமலதாவை கடவுள் வரமாக பெற்றவர் என்றால் அது மிகையாகாது. அவரது ஆன்மா அமைதியுடன் சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

கோரிக்கை வைத்த தமிழக மக்கள்.. நிறைவேற்றி அசத்திய ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…

7 hours ago

இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…

நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…

8 hours ago

நான் இருக்கேன், Don’t worry- லைகாவுக்கு மீண்டும் கைக்கொடுக்கும் ரஜினிகாந்த்?

நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…

8 hours ago

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்.. களமிறங்கும் முக்கிய வீரர்கள் : ருதுராஜ் போட்ட மாஸ்டர் பிளான்!

ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…

9 hours ago

கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?

கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…

10 hours ago

பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…

மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

10 hours ago

This website uses cookies.