ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் திரவுபதி முர்மு முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 2 நாள் பயணமாக மதுரைக்கு வந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதன்பின், நண்பகலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
மகா சிவராத்திரிய முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக அவர் கோவை வந்துள்ளார்.
ஈஷா மையத்தை வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின் அவர் தியான பீடத்தில் வழிபாடு செய்தார்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
This website uses cookies.