மன்னர்கள் செய்ததை பிரதமர் செய்துள்ளார்.. ராமர் கோயில் பற்றி பேசும் போது கண்ணீர் வருது : இளையராஜா நெகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2024, 7:40 pm

மன்னர்கள் செய்ததை பிரதமர் செய்துள்ளார்.. ராமர் கோயில் பற்றி பேசும் போது கண்ணீர் வருது : இளையராஜா நெகிழ்ச்சி!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.20 மணியளவில் ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள துணியை அகற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. நகை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பால ராமருக்கு பிரதமர் மோடி விசேஷ பூஜைகளை செய்தார். பின்னர், பாதங்களில் தாமரை மலர்களை தூவியும் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தார்.

இதனையடுத்து, அயோத்தி கோவிலில் குழந்தை ராமர் எழுந்தருளினார். பின்னர், கோவிலில் இருந்த சாதுக்களுக்கு பரிசுகளை வழங்கியதுடன், அவர்களிடமும் ஆசி பெற்றார். தொடர்ந்து, அயோத்தியில் பேசிய பிரதமர் மோடி, ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது என்றும், நூற்றாண்டு கால தியாகங்கள் மற்றும் காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது எனக் கூறினார். மேலும், மக்கள் அனைவரும் வீடுகளில் இன்று மாலை ஸ்ரீராம தீபத்தை ஏற்ற வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர், ‘உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடத்தபட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.

ராமர் பிறந்த இடத்திலேயே ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். முன்பெல்லாம் மன்னர்கள் தான் கோயில்களை கட்டினார்கள். ஆனால் தற்போது பிரதமர் மோடி கோவிலை கட்டியுள்ளார். இது இந்தியா முழுவதற்குமான கோயில்’ என்று தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!