நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி… விமான நிலைய முனையம்… ரூ.19,850 கோடிக்கான திட்டங்களுக்கு அடிக்கல்!!!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2024, 11:15 am
நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி… விமான நிலைய முனையம்… ரூ.19,850 கோடிக்கான திட்டங்களுக்கு அடிக்கல்!!!
திருச்சி விமான நிலையத் திறப்பு மற்றும் ரூபாய்19,850 கோடிக்காண வளர்ச்சி திட்டங்கள் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
திருச்சி சர்வதேச விமான 2019ஆம் ஆண்டு தரம் உயர்த்தி புதிய விமான நிலைய முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்தது முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று தற்போது நிறைவுற்றது.
இந்த புதிய விமான நிலையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2அடுக்குகளைக் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாஸ ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய முனையத்தைத் திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து
தனி விமானத்தில் பிரதமர் மோடி திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 10மணிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி உரையாற்றுகிறார்.
பின்னர் 12மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிட்டு ரூபாய் 19,850 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சியிலிருந்து லட்சத்தீவிற்கு புறப்பட்டுச் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடி முதல், விமானம் நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 8,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் சுமார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி) அதிகாரிகள் 30பேர் திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பிரதமரின் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இரு இடங்களிலும் 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் வருகை அன்று 5அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட உள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் விமான நிலையம் பகுதியில் உள்ள வீடுகள், பணியாற்றுபவர்களின் விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.