பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயார்.. இவரு இயக்கினால் ஓகே : சத்யராஜ் ரிலீஸ் செய்த லிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2024, 6:49 pm

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்றை மையமாக வைத்து விவேக் ஓபராய் நடித்திருந்த பிஎம் நரேந்திர மோடி, மன் பைரகி, மோடி தி ஜர்னி ஆப் காமன் மேன், மோ ககா கா கவுன் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது புதிதாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. பாலிவுட்டில் தயாராகும் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: காரில் வந்து ஆடுகளை திருடிய நபர்..விரட்டிப் பிடித்த மக்களுக்கு காத்திருந்த ஷாக் : போலீஸ் விசாரணை!

தற்போது படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும், படப்பிடிப்பும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்கான அழைப்பு எனக்கு வரவில்லை என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,” நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்..

படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனங்கள் தான் சொல்ல வேண்டுமென அக்ரிமெண்ட் உள்ளது. அதனால் படங்கள் குறித்து சொல்ல முடியாது. கருப்பு சட்டை போட்டுள்ள நீங்கள் காவி சட்டை போட்டவர் பாத்திரத்தில் நடிக்கவுள்ளீர்களே என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர்,” பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்கான அழைப்பு எனக்கு வரவில்லை.

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்றால் என் நண்பர் மணிவண்ணன் இயக்கினால் அருமையாக இருக்கும். இல்லையென்றால் மாரி செல்வராஜ் , பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்கினால் மிக அருமையாக இருக்கும்” என பதிலளித்தார்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!