திருந்துவாருனு நினைச்சேன்.. முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி டியூஷன் கற்க வேண்டும் : ஈவிகேஎஸ் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 4:02 pm

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது குடியரசு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது , பிரதமர் மோடி கேரள மாநிலத்திற்கு நேரில் சென்று நிவாரண பணிகளை ஆய்வு செய்து பணிகளை செம்மைப்படுத்தி நிதியுதவி அதிக அளவில் செய்ய வேண்டும் என்றார்.

சுற்றுச்சூழல் மட்டுமின்றி பலயிரகணக்கன பேரிடர் பொதுமக்களுக்கு நிதியுதவி மத்திய ஒதுக்கீடு செய்வதில்லை என குற்றம்சாட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன் , தமிழகத்தில் வாக்கு செலுத்தாத மக்களுக்கு கூட திட்டத்தை தமிழகத்தில் செய்து வருவதாகவும் , முதல்வரிடம் மோடி டியூசன் படிக்க வேண்டும் என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் , கார்த்தி சிதம்பரம் கட்சி வளர்ச்சி குறித்து பேசியதாக சொன்னால் மோடி நல்ல தலைவர் என்று சொன்னது கட்சி வளர்ச்சியா ? என்றும் கார்த்தி சிதம்பரம் திருந்துவாறு என்று நினைத்தேன் என்றார்.

கள்ளு கடைகளை திறந்தால் ஓரளவு கள்ளச்சாராயம் ஓழிக்கப்படும் எனவும் , ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் உடல்நலம் பாதிக்காமல் கள்ளை அருந்துவார்கள் என்றும் , விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என்பதால் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என்றும் , தமிழக முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் இது குறித்து வலியுறுத்துவேன் என்றார்.
ஆளுநர் இமயமலைக்கு அனுப்பி விடலாம் அவர் அங்கு சென்று தியானம் செய்யவிடுவதை விட்டு தமிழகத்தில் ஏன் ஆளுநராக மத்திய அரசு போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி