பிரதமர் மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி : ஒன்று திரண்டு கண்டுகளித்த பாஜகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2023, 4:37 pm

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் 3,4,5,வார்டுகளில் பாஜக அரசாங்க தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இன்று பிரதமர் மோடி 100 வது மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு கழித்தனர்.

100-வது நிகழ்ச்சியை முன்னிட்டு பாஜக நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அதே ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதன்பின் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னரும் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. மனதின் குரல் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். தமிழின் பெருமை குறித்தும் பலமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 வது அத்தியாத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி 100 அத்தியாத்தை எட்டியுள்ளதை குறிக்கும் விதமாக பாஜக பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பப்பட்டது. பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றினார்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 353

    0

    0