பிரதமர் மோடியின் தாயாரும்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவும்.. இப்படியும் ஒரு ஒற்றுமையா?!!
Author: Udayachandran RadhaKrishnan24 October 2023, 4:23 pm
பிரதமர் மோடியின் தாயாரும்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவும்.. இப்படியும் ஒரு ஒற்றுமையா?!!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தழுதாளியில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் விஜய மீனாட்சி உடனமர் சுந்தரேஸ்வரர் எமகண்டேஸ்வரர் யோகா நோய் தீர்க்கும் சமத்துவ கலை கோவிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் இறைவனடி சேர்ந்த திருமதி. ஹீராபென் மோடி அவர்களின் திருவுருவ சிலை புதுச்சேரி பாஜக பிரமுகர் விக்கி (எ) ராஜகணபதி அவர்களின் சொந்த செலவில் நிறுவப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர ஜாக்குவார் தங்கம் அவர்கள் சிலையை திறந்து வைத்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சன் டிவி புகழ் எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன் (மாரிமுத்து) அவர்களின் திரு உருவ சிலையும் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ஆர்த்தார் நீத்ம வேள்வி பூஜை செய்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு அறுசுவை அன்னதான உணவு சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு நிறுவனர் திருச்சிற்றம்பலம் ஆதீனம் ஆதிசங்கரர் – வாசுகி அவர்கள் செய்திருந்தனர்.