ஓடிட்டேன்ல… போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதி ; இறுதியில் நடந்த டுவிஸ்ட்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 9:16 pm

திருப்பூர் ; பல்லடம் பேருந்து நிலையம் அருகே போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 3 மணியளவில் 3 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக பேருந்து நிலையம் அருகே விசாரணை கைதியுடன் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, அவர்கள் பிடியிலிருந்து திடீரென அந்த விசாரணை கைதி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 3 போலீசாரும் சுதாரித்து கொண்டு கைதியை பின்னால் விரட்டி சென்றுள்ளனர்.

சுமார் 500 அடி தொலைவு வரை சாலையின் எதிர் திசையில் ஓடிய போது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த சரக்கு ஆட்டோ ஒன்றின் மீது மோதி கீழே விழுந்துள்ளார். அவரை விரட்டி வந்த 3 போலீசாரும் விசாரணை கைதியை மடக்கி பிடித்து அழைத்து சென்றனர்.

தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!