சிறைக்குள் ஜாலியாக மது அருந்தும் சிறைக் காவலர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2023, 9:59 pm

சிறைக்குள் ஜாலியாக மது அருந்தும் சிறைக் காவலர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயக்குமார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காவலர் பணிக்கு தேர்வாகி தொடர்ந்து வேலூர் மற்றும் ஆயுதப்படை பிரிவிலும் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

https://player.vimeo.com/video/889152049?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

இந்த நிலையில் இவர் தொடர்ந்து சிறை கைதிகளை பார்க்க வருபவர்களிடம் பணம் பெறுவதாகவும், இரவினில் குடித்துவிட்டு சிறைவாசிகளை அதிக தொந்தரவு செய்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ