24X7 மக்களை குடியில் மூழ்க வைத்த செந்தில்பாலாஜிக்கு கைதி எண் 1440.. இதுதான் கர்மா : பாஜக அட்டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2023, 10:46 am

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதீயஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 9ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் தேரடி வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன், பாஜக மாநில செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மீனாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட, ஒன்றிய, நகர பாஜக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது உரையாற்றிய இராம.ஸ்ரீநிவாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதி எண் 1440 குறித்து 24 மணி நேரத்திற்கு 1440 நிமிடங்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களை 1440 நிமிடங்கள் விடிய விடிய குடிக்க வைத்த அமைச்சருக்கு கைதி எண் 1440 வழங்கப்பட்டுள்ள தான் கர்மா என்றும் ஆனாலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் விளக்கமளித்தார்,

  • Vidaamuyarchi ticket booking தடபுடலாக தொடங்கிய “விடாமுயற்சி” டிக்கெட் முன்பதிவு…முண்டியடிக்கும் ரசிகர்கள்..!