கடைசி வரை சிறை… கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 46 வயது ஆயுள் கைதி திடீர் மரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2023, 1:21 pm

கடைசி வரை சிறை… கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 46 வயது ஆயுள் கைதி திடீர் மரணம்!!

கோவை உக்கடம் ஜி எம் நகரை சேர்ந்தவர் என்.எஸ்.அக்கீம் (வயது46). இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 40-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார் .

பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இவருக்கு மூளையில் புற்றுநோய் தொற்று ஏற்பட்டது.

இதற்காக அக்கீமுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து பாதிப்பு இருந்து வந்தது .

இதனையடுத்து அக்கீமை டாக்டர்கள் கோவைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3 மாதங்களாக பரோலில் இருந்தபடி வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சைகள் பலனளிக்காமல் இன்று காலை 10 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ