கைதி மர்ம மரணம்? வேலூர் ஆண்கள் சிறையில் ஷாக் சம்பவம் : நேரில் நீதிபதி விசாரணை!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2025, 11:48 am
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்த சங்கர் 35.
இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 22 ஆம் தேதி வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து சிறை கைதியாக இருந்து வந்தார்.
இதையும் படியுங்க: எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்லூரி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.. மாணவர்கள் போராட்டம்!
இவருக்கு நேற்று சிறையில் வளாகத்தில் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் வாயில் நுரை தள்ளி சிறை கைதி சங்கர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் நீதிமன்றத்தில் உள்ள JM 1 மேஜிஸ்ட்ரேட் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.