கேரள சிறையில் இருந்து தப்பி ரயில் மூலம் பயணம் செய்த கைதி : 2 மணி நேரத்தில் போலீசார் எடுத்த அதிரடி… திருப்பூரில் காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 10:42 pm

திருப்பூர் : மனைவியை சரமாரியாக தாக்கியி கணவனை கைது செய்த நிலையில் ஜெயிலில் இருந்து ரயில் மூலம் தப்பி வந்தவனை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷினாய் திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6ஆம் தேதி இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஷினாய் , அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்தவர் பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மாநிலம், குழல்மண்ணம் போலீசார் ஷினாயை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சிறையில் இருந்த இன்று மதியம் தப்பித்த ஷினாய் , பாலக்காட்டில் உள்ள ரயில் ரயில் நிலையத்தில் இருந்த போது, கேரளாவில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி தப்பித்துள்ளார்.

இதனை அறிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த குழல்மண்ணம் காவல்நிலைய போலீசார் ஷினாய் புகைப்படத்தை, திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர்.

இதனிடையே ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்த போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஷினாய் இருப்பதை அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார் அவரை கைது செய்து இதுகுறித்து கேரளா மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திருப்பூர் வந்த கேரள மாநில போலீசார் ஷினாயை கைது செய்து கேரள மாநிலம் அழைத்து சென்றனர்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?