நீதிமன்றத்துக்குள் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பியோடிய கைதி : கஞ்சா குற்றவாளியால் பரபரப்பு!!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் குருமாறன் வயது 23. இவர் மீது கஞ்சா விற்பனை செய்தல் உள்ளிட்ட ஏழு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே காவல்துறையினருக்கு குருமாறன் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததையடுத்து அவரை திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி உள்ளனர்.
அப்பொழுது நீதிபதி அவருக்கான நீதிமன்ற காவல் குறித்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது நீதிமன்றத்தில் இருந்து குருமாறன் தப்பி ஓடி உள்ளான். உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினர்கள் அவனைப் பிடிக்க முயன்ற பொழுது அவர்களை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து குருமாரன் தப்பிச் சென்றுள்ளான்.
இந்த நிலையில் தப்பி ஓடிய கைதி குருமாரனை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
This website uses cookies.