சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை சிறையில் இருந்து கைதிகள் விடுதலை.. நன்னடத்தை காரணமாக 8 பேர் விடுவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2023, 10:32 am

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை சிறையில் இருந்து கைதிகள் விடுதலை.. நன்னடத்தை காரணமாக 8 பேர் விடுவிப்பு!!

கோவை மத்திய சிறையில் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை, தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி சிறைகளள் உள்ளன. இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்துக்கு நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 15 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை முடியும் நாளுக்கு முன்கூட்டியே விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி கோவை சிறையில் 7 ஆண் கைதிகள், ஒரு பெண் கைதி என்று 8 பேரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று அந்த 8 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…