திருச்சி ; திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தனியார் பேருந்து தவறி விழுந்த பெண் கால்களில் ஏறி இறங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் இன்று மதியம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்கின்ற தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது, ராங் ரூட்டில் வந்த அந்த தனியார் பேருந்து அவரை கவனிக்காமல் வண்டியை எடுத்துவிட்டார்.
இதனால் முன்பக்க படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்த நிர்மலாவின் இரண்டு கால்களிலும் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின. வழியில் அலறி துடித்த அவரைக் கண்டு அப்பகுதி இருந்த மக்கள் கோபமடைந்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனவர்களை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிர்மலாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இச்சம்பத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.