தனியார் பேருந்து – சரக்கு வாகனம் மோதி விபத்து: 2 பேர் பலி… 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. பொள்ளாச்சியில் கோர சம்பவம்!!

Author: Babu Lakshmanan
28 September 2022, 3:57 pm

பொள்ளாச்சியில் அருகே தனியார் பேருந்தும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் கோபாலபுரத்தில் இருந்து KMT எனும் தனியார் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பலரை ஏற்றிகொண்டு பொன்னாயூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

தனியார் பெட்ரோல் பங்க் அருகே வரும் பொழுது, பொள்ளாச்சியிலிருந்து வந்த சரக்கு வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்
சரக்கு வாகன ஓட்டி நடராஜ் மற்றும் பேருந்து பயணி கிட்டுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், விபத்து குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பேருந்து சரக்கு வாகனம் மோதி இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 545

    0

    1