STYLE-னு நினைப்பு… செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்… உயிர் பீதியில் பயணித்த பயணிகள்.!!

Author: Babu Lakshmanan
9 November 2023, 7:16 pm

வேலூர் அருகே செல்போன் பேசியபடி தனியார் பேருந்தை ஓட்டுனர் இயக்கியதால் பயணிகள் பீதியடைந்தனர்.

வேலூரில் இருந்து ஒடுக்கத்தூருக்கும், ஒடுக்கத்தூரிலிருந்து வேலூருக்கும் பல தனியார் பேருந்துகள் அணைக்கட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், (08.11.2023) மதியம் ஒடுக்கத்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார்  பேருந்தில் பேருந்து ஓட்டுனர் நீண்ட தூரம் செல்போன் பேசியபடியே பேருந்தை இயக்கியுள்ளார்.

சாகசம் செய்வதை போல ஒரே கையால் ஸ்டேரிங்கையும், அதே கையால் ஹாரனையும் அடித்தும், சில சமயம் ஸ்டேரிங்கை விட்டுவிட்டு பேருந்தை ஓட்டியுள்ளார். இது அப்பேருந்தில் பயணிந்த பயணிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு அவர்களை அச்சத்தில் உறைய செய்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வழித்தடத்தில் அடிக்கடி நிகழ்வதால் தனியார் பேருந்து நிறுவனங்களும், அரசு போக்குவரத்து துறையும் இதனை கண்காணித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விதிமுறையை மீறும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ