இது எல்லாம் ரொம்ப ஓவரு… தனியார் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் பெண் பயணி : வைரலாகும் சர்ச்சை வீடியோ!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 7:31 pm

கோவை மாவட்டம் காந்திபுரம்- ஆனைகட்டிக்கு செல்லும் தனியார் பேருந்தில் கூட்டம் அதிமாக இருந்ததால், பெண் பயணிகள் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள கதவில் அமர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பேருந்து கணுவாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் போது பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது.

ஆனைகட்டிக்கு செல்லும் வழி மலைப்பாதை என்பதால் பல்வேறு வளைவுகள் இருக்கின்ற சூழலில் இது போன்று பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்றும், ஆனைகட்டிக்கு இரண்டு தனியார் பேருந்துகளும் மிகக் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகளும் இயக்கப்படுவதால் பொதுமக்கள் இவ்வாறு பயணிக்கும் சூழல் ஏற்படுவதாகவும், அப்பகுதிக்கு கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

அதே சமயம் வருமானத்திற்காக அதிகமான மக்களை ஏற்றிச்செல்லும் தனியார் பேருந்துகள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் நிலையில், அப்பேருந்தின் ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் வலைதளவாசிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

https://vimeo.com/732111185
  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 727

    0

    0