தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன் ; அண்ணன் மகனின் சாகசத்திற்கு துணை போன ஓட்டுநரால் சர்ச்சை…!!
Author: Babu Lakshmanan29 November 2022, 8:10 pm
தனியார் கல்லூரி பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது.
சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி என்று எழுதப்பட்ட பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது. இது தொடர்பான விசாரணையில், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஜலகண்டாபுரம் அருகில் உள்ள பக்கநாடு கிராமத்தைச் சார்ந்த சந்திரசேகர் என்பவர் ஓமலூரில் உள்ள தனியார் (ஏ.வி.எஸ். கலை அறிவியல்) கல்லூரி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அந்த பேருந்து பழுது ஏற்பட்டதால், அதே நிர்வாகத்திற்கு சொந்தமாக சேலம் அம்மாபேட்டையில் இயங்கி வரும் மகளிர் கல்லூரி பேருந்தை எடுத்து சென்றுள்ளார்.
மாணவர்கள் அனைவரையும் இறக்கிவிட்ட பிறகு, வழக்கம் போல் அவரது இல்லத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரது அண்ணன் மகன் குணா என்ற பிளஸ் டூ மாணவன் சிறிது தூரம் பேருந்தை ஓட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு குறைவான ஒருவர் பேருந்தை இயக்கியுள்ள போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டனை, மாணவனுக்கா? பெற்றோருக்கா? கல்லூரிக்கா என்ற சர்சையும் எழுந்தது.