ஊர் முழுக்க பரவிய கார்பன் துகள்…தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்ட கிராம மக்கள்: சுற்றுச்சூழல் அதிகாரிகள் நடவடிக்கை..!!

Author: Rajesh
30 March 2022, 2:03 pm

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே ஆதித்ய பிர்லா தனியார் தொழிற்சாலை கார்பன் துகள்கள் பரவி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஆதித்யா பிர்லா தனியார் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் கார்பன் துகள்கள் பாப்பன் குப்பம் கிராமத்தில் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் சமரசம் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கார்பன் துகள்கள் பரவி கிராமத்தில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாகவும் நீர்நிலை குடிநீர் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுவரை ஆலையை இயக்கக் கூடாது என பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கார்பன் துகள்கள் பரவுவதால் கிராம மக்கள் பாதிப்பு ஏற்படுவது மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரிய வந்துள்ளதால்
ஆலை நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை அனுப்பப்படும் என்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1413

    0

    0