EMI செலுத்தாததால் கடன் பெற்ற நபரை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கிய கொடூரம் : வைரலாகும் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2022, 8:16 pm
விருதுநகர் : மாதத் தவணை கட்ட தாமதமானதால் கடன் பெற்ற நபரை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடித்து துவைத்த காட்சிகள் செளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சோலைராஜ் இவர் பேப்பர் டீலராக தொழில் செய்து வரும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பஜாஜ் பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் தனிநபர் கடனாக ரூபாய் 60,000 பெற்றதாக கூறப்படுகிறது.
அதைமாதத் தவணையாக ரூபாய் 2288ரூபாய் செலுத்தி வரும் நிலையில் இந்தமாதத்திற்கான தவணை தொகை செலுத்த காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
இதனால் பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சிவா என்பவர் சோலைராஜுக்கு போன் செய்து தகாத வார்த்தையில் பேசி அல்லம்பட்டி முக்கு ரோட்டில் உள்ள தனியார் உணவகத்திற்கு வர சொன்னதாகவும் ,அங்குவந்த சோலைராஜை சிவா மற்றும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் நான்கு நபர்கள் இணைந்து சோலை ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த சோலைராஜ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து சோலைராஜ் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு தனியார் உணவக சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் அந்த சிசிடிவி காட்சிகளில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சோலை ராஜ் என்பவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடன் பெற்று தவணை செலுத்த காலதாமதம் ஆனதால் நிதி நிறுவன ஊழியர்கள் ஒருவரை தாக்குவது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0