கண்கள், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூர கொலை : திண்டுக்கல்லில் பயங்கரம்!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2024, 1:18 pm
திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண் மற்றும் கை கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற திண்டுக்கல் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி முதற்கட்ட விசாரணை தொடங்கினார்.
மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தாலுகா காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் கொலைக்கான காரணம் என்ன?என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில்
இறந்த இடத்தில் மோப்ப நாய்கள் கொண்டும், தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுனர். மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், திண்டுக்கல் சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகன் மகன் பாலமுருகன் வயது 39 இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வீடு வசதி கடன் பிரிவில் வேலை பார்த்து வந்ததாக தெரியவந்துள்ளது. இவர் மூன்று மாத காலங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திலிருந்து பணியில் இருந்து விலகி விட்டார்.
இவர் மூன்று தினங்களுக்கு முன்பு காணவில்லை என்று சின்னாளபட்டி காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்து உள்ளனர்.
இதையும் படியுங்க: ‘கட்சிக்குள்ளேயே எதிர்மறை தாக்கம்’.. ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. திருமாவின் காரணம்!
இந்த நிலையில் இன்று காலை பாலமுருகன் தோமையார்புரம் அருகே மர்ம நபர்களால் கை, கால் மற்றும் கண்கள் கட்டப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு குப்பை கிடங்கில் வீசப்பட்டு உள்ள நிலையில் பிரேதத்தை கைப்பற்றிய தாலுகா போலீசார்
மேலும், அவருக்கு முன்பகை உள்ளதா? எதனால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்த பின்னரே தனியார் நிதி நிறுவன ஊழியரின் படுகொலை காரணம் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.