தனியார் மருத்துவமனை செவிலியருக்கு கத்திக்குத்து : விடுதிக்குள் புகுந்து இளைஞர் வெறிச்செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2025, 3:51 pm

கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் பிரியா என்ற டெண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணி புரிந்து செவிலியர் பிரியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சேர்ந்த சுஜித் என்ற இளைஞருக்கும் காதல் இருந்து வந்து உள்ளது.

இதையும் படியுங்க: நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன்.. தென்காசியில் பரபரப்பு!

சுஜித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் பிரியா அவருடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைய முயன்ற சுஜித்தை அங்கு பணியில் உள்ள விடுதிக் காப்பாளர் தடுத்து உள்ளார்.

அவரை கடுமையான வார்த்தைகளில் பேசி உள்ளே சென்ற சுஜித், பிரியாவின் கழுத்தை நெரித்து கத்தியால் குத்த முற்பட்டு உள்ளார். பிரியா தப்ப முயன்ற போது அவரது கைகளில் வெட்டுக் காயம் உண்டானது.

இதை அடுத்து அங்கு வந்த விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை காவலாளிகள் சுஜித்தை பிடித்து ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Race Course Police Station

இதை அடுத்து விடுதிக் காப்பாளர் அளித்த புகாரில் பேரில் பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுஜித்தை சிறையில் அடைத்தனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பிரியாவும், சுஜித்தும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பிரியா திடீரென பேசுவதை நிறுத்தியதால் சுஜித் ஆத்திரம் அடைந்து இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Nurse Stabbed

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் செவிலியரின் குடும்ப பிரச்சனை காரணமாக அவரை அவரது கணவர் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?