பழனி அருகே உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட கல்லூரி மாணவிக்கு மாத்திரை மாற்றி வழங்கப்பட்டதால், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதீனா நகரை சேர்ந்தவர் சேக். இவரது மகள் ஆப்ரா பர்வீன் (18), பழனி அருகே கல்லூரியில் படித்து வரும் இவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்த போது, உடல்நலக் குறைவு ஏற்பட்டு பழனியில் உள்ள சஞ்சய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இரவு சுமார் 10 மணி அளவில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக எழுதிக் கொடுத்த சீட்டில் வேறொரு 49 வயது மதிக்கத்தக்க பெண்ணின் மருந்து மாத்திரையை 18 வயது கல்லூரி மாணவிக்கு கொடுத்ததால், மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இன்று காலை மாத்திரை சீட்டை பரிசோதனை செய்து பார்க்கும் போது வேறுஒருவருடைய ஒரு சீட்டுக்கான மருந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கேட்பதற்காக வந்த பெற்றோர் மற்றும் உறவினர் சஞ்சய் மருத்துவமனையில் முன்பு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் குறித்து வந்த பழனி நகர காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் தவறான மருந்து சீட்டு மூலம் மாத்திரைகள் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பழனி சஞ்சய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவிக்கு பதிலாக வேறொரு பெண்ணின் மருந்து சீட்டு மாத்திரை மருந்துகளை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.