காரில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல்.. விடுதி உரிமையாளர் கைது!

Author: Hariharasudhan
22 October 2024, 6:35 pm

கோவையில் விடுதியில் தங்கியுள்ள மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை அளித்த உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர்: கோவை பீளமேடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் மகளிர் தங்கும் விடுதி வைத்து நடத்தி வருகிறார். இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என பலர் தங்கி உள்ளனர். இந்நிலையில், நேற்று விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவரை தனது காரில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்பொழுது, மாணவிக்கு அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர், நேற்று இரவு விடுதிக்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இது குறித்து விடுதி உரிமையாளர் ராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Arrested

அப்பொழுது வாக்குவாதம் ஏற்படவே, ராஜ்குமாரை மாணவியின் பெற்றோர் தாக்கியுள்ளனர். பின்னர், அவரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: நண்பரின் மனைவி குறித்து அவதூறு.. கறி வெட்டும் கத்தியால் பறிபோன உயிர்!

இதனையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!